அண்ணா நூற்றாண்டு நூலகம்

கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் கொண்ட பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது நமது தமிழுக்கு கிடைத்த மிக பெரிய ஊக்கம். நம் தமிழ்க்கு அழிவில்லை என்பதற்கு உதாரணம்.

Advertisements

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) International Forum for Information Technology in Tamil (INFITT) தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான விடயங்களை ஆயும், நியமங்களை பரிந்துரைக்கும் ஒரு தொண்டூழியர் அமைப்பு ஆகும். இவ்வமைப்பில் அரசாங்கங்கள் (தமிழ்நாடு-இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்), அனைத்துலக அமைப்புகள், மற்றும் பலநூறு தன்னாவலர்களை கொண்டிருக்கின்றது. இவ்வமைப்பு உத்யோகபூர்வமாக யூலை 24, 2000 அன்று ஆரம்பிக்கப்பட்டது.
இவ்வமைப்பின் முக்கிய நிகழ்வாக தமிழ் இணைய மாநாடுகள் தொடர்ச்சியாக 2000 முதல் 2004 வரை நடைபெற்றன. அதன்பின்னர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு 2009ம் ஆண்டு நடைபெற்றது.

நீதிநூல் காலம்

தமிழ் இலக்கியத்தில் கி.பி. 100 இருந்து கி.பி. 500 வரையிலான காலப்பகுதி நீதிநூல் காலம் எனப்படுகிறது. இந்தக் காலப் பகுதியை சங்கம் மருவிய காலம் என்றும் வகைப்படுத்துவர். இந்த காலப்பகுதில் இயற்றப்பட்ட பதினெண்கீழ்க்கணக்கு என்ற 18 நூல்களின் தொகுப்பில் 12 நீதிநூல்கள் (மு. வரதராசன்). சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை இயற்றப்பட்டது இக்காலத்திலேயே.
நீதிநூல்கள்
* திருக்குறள்
* நாலடியார்
* நான்மணிக்கடிகை
* சிறுபஞ்சமூலம்
* திரிகடுகம்
* ஏலாதி
* இனியவை நாற்பது
* ஆசாரக்கோவை
* முதுமொழிக்காஞ்சி
* இன்னா நாற்பது

தமிழ் சங்கங்கள்

Executive Mail address Site address
President president@tamilosai.org http://www.tamilosai.org/
Veera Pandian committee@missouritamilsangam.org http://www.missouritamilsangam.org/
DELHI TAMIL SANGAM dhillitamilsangam@gmail.com http://delhitamilsangam.in/
Dr.R.Sivakumar.IPS kolkatatamilsangam@yahoo.co.in http://www.kolkatatamilsangam.org
Seattle Tamil Sangam Info@seattletamilsangam.org http://seattletamilsangam.org
Madurai Tamil Sangam maduraitamilsangam@yahoo.co.in http://maduraitamilsangam.com/
Senthamil College principalsenthamilcollege@yahoo.co.in
Mr. Jayabalan Sundaravelu thamizh@yahoogroups.com http://www.carolinatamilsangam.org/
Greater Atlanta Tamil Sangam contact@gatamilsangam.org http://www.gatamilsangam.org/
SINGAI TAMIL SANGAM president@singai.org http://www.singai.org
New Jersey Tamil Sangam Chittig@gmail.com http://www.njtamilsangam.info/
Surat Tamil Sangam info@surattamilsangam.org http://surattamilsangam.org/
Utah Tamil Sangam moderator@utahtamilsangam.org http://www.utahtamilsangam.org/
Austin Tamizh Sangam http://www.austintamilsangam.org/
Bay Area Tamil Manram president@bayareatamilmanram.org http://www.bayareatamilmanram.org/
Mr. Srikanth Venugopalan http://www.bkmhouston.org/
Chicago Tamil Sangam http://www.chicagotamilsangam.org/
Mr. Ramesh Natchiappan president@cttamilsangam.org http://www.cttamilsangam.org/
President president@sangam.org http://www.sangam.org/
Dr. Rajan Subramanian rajvkk@dfwmts.org http://www.dfwmts.org/
Vinoth Purusothaman vinoth.mts2010@gmail.com http://www.mitamilsangam.org/
minnesota tamil sangam palli@minnesotatamilsangam.org http://www.minnesotatamilsangam.org/
Richmond Tamil Sangam webmaster@richmondtamilsangam.org http://www.richmondtamilsangam.org/
Riyadh Tamil Sangam info@riyadhtamilsangam.com http://www.riyadhtamilsangam.com/
Boston Thamil Association board@bostonthamil.com http://www.bostonthamil.com/
Kentucky Tamil Sangam kytamilsangam@gmail.com http://www.kentuckytamilsangam.org/
Karanthai Tamil Sangam info@karanthaitamilsangam.com http://karanthaitamilsangam.com/
Moreh Tamil Sangam http://www.tamilsangammoreh.com/
Secretary secretary@artamilsangam.org http://www.artamilsangam.org
Ramesh Viswanathan ramesh_vis@hotmail.com or ramesh@uaetamilsangam.com http://www.uaetamilsangam.com/
KG Senthil Nathan (a) Babu president@tenntamil.org http://tenntamil.org/
Subhashini Srinivasan subhavasan@gmail.com http://sweb.uky.edu/StudentOrgs/LTCA/index.html
Mr. Periakaruppan http://www.achi.org/
Tamil Sangam of Greater Washington tamil.sangam@gmail.com http://www.washingtontamilsangam.org
Mr.Velankanniraj president@tagdv.org http://www.tagdv.org/CMS/index.php
Venkat Subramanian vsubrama@southernco.com http://www.alabamatamilsangam.org/
New England Tamil Sangam tamil@netamilsangam.org or netamilsangam@yahoo.com http://www.netamilsangam.org
Tamil Cultural Association@The University of Texas at Austin sata@mail.utexas.edu http://studentorgs.utexas.edu/tamilsa/index.html
Muscat Tamil Sangam tamilmct@yahoo.com http://muscattamilsangam.org/
Avvai Tamil Sangam contactus@avvaitamilsangam.org http://www.avvaitamilsangam.org/
TAMPA TAMIL ASSOCIATION tampatamil@yahoo.com http://www.tamausa.org/
Mylai Thiruvalluvar Tamil Sangam #4 East Mada Street Mylapore Chennai- 600004 Tamil Nadu
Tamil Sangam of Greater Rochester support@tamilrocs.org http://www.tamilrocs.org/
வல்லம் தமிழ்ச் சங்கம் ஜி டி எம் ஹெல்த் கேர் ,பேருந்து நிலையம் ,வல்லம்,தஞ்சாவூர் மாவட்டம்,தமிழ்நாடு http://www.vallamthamil.blogspot.com/

தமிழ் ஒருங்குறி(Tamil Unicode)

தமிழ் ஒருங்குறி உங்களுக்காக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.&#x என ஆரம்பிக்கும் வார்த்தைகளை எடுத்து .html கோப்பில்(file) சேமித்து இயக்கின் உங்களுக்கு தமிழ் எழுத்து கிடைக்கும்

ி ி
சூத்திரம்
க+் க+ ்=க்
க+ா க+ா=கா
க+ி க+ி=கி
க+ீ க+ ீ=கீ
க+ு க+ ு=கு
க+ூ க+ ூ=கூ
க+ெ க+ ெ=கெ
க+ே க+ ே=கே
க+ை க+ ை=கை
க+ொ க+ ொ கொ
க+ோ க+ ோ=கோ
க+ௌ க+ ௌ=கௌ
தமிழ் எண்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
100
1000

 

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என்பது உலகில் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வரும் தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து தமிழ் ஆராய்ச்சியை ஒருமுகப்படுத்தவும், வளப்படுத்தவும் தமிழறிஞர்கள் கூடி நடத்தும் உலக மாநாடு ஆகும். தவத்திரு தனிநாயகம் அடிகளாரின் முயற்சியால் 1964-ம் ஆண்டு, தில்லியில் ஆரம்பிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த வேண்டுமென்று வரையறுத்துக் கொண்டது.
இது வரை ஒன்பது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளது.

முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரிலே 1966 ஏப்ரல் 16-23 தேதிகளில் நடத்தப்பட்டது
இரண்டாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10ஆம் நாட்களில் சென்னையிலே நடத்தப்பட்டது
மூன்றாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1970 சனவரி 15-18 காலப்பகுதியில் பாரிசிலே நடைபெற்றது
நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1974 சனவரி 3-9 காலப்பகுதியில் மாநாட்டை யாழ்ப்பாணத்தில் வெகு விமரிசையாக நடத்தியது
ஐந்தாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1981-ம் ஆண்டு சனவரி 4-10 இல் மதுரையில் இடம்பெற்றது
ஆறாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் 1987 நவம்பர் 15-19 நடைபெற்றது
ஏழாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு ஆப்பிரிக்காவில் மொரீசியசில் 1989 டிசம்பர் 1-8 நடைபெற்றது
எட்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு தஞ்சாவூரில் 1995 சனவரி 1-5 நடைபெற்றது
ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது

தமிழ் வகைகள்

தனித்தமிழ்
பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ் மொழியை
தனித்தமிழ் எனலாம். தனித்தமிழ் தமிழில் மிகுதியாகிவரும் ஆங்கில சொற்களையும், நீண்டகாலமாக கலந்துநிற்கும் வடமொழிச் சொற்களையையும் தவிர்த்து எழுதுவதை இலக்காக கொண்டது. தமிழ் வேர்ச் சொற்களில் இருந்து ஆக்கப்படும் சொற்களே தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் என்ற கருத்துடையது. இது ஒரு கருத்தியல் இலக்கே. தமிங்கிலம், மணிப்பிரவாளம் போன்றவற்றின் எதிர்நிலை எனலாம். இது அவற்றின் ஆதிக்கத்தால் தோன்றிய எதிர்நிலை எனலாம்.

கொடுந்தமிழ்
தமிழ் மொழி சீர்தரப்படுத்தப்பட்ட செந்தமிழில் இருந்தோ அல்லது பொதுத்தமிழ் வழக்கில் இருந்தோ சற்று வேறுபட்டு பேசப்படும் பொழுதோ அல்லது எழுதப்படும் பொழுது கொடுந்தமிழ் எனப்படும். கொடுந்தமிழ் ஒரு மரபுச் சொல் வழக்கே இன்றி மொழியின் உயர்வு தாழ்வினைச் சுட்ட இல்லை. பழந்தமிழ் இலக்கியங்களில் கொடுந்தமிழ் மொழியை மட்டுமல்லாமல், அது பேசப்பட்ட நிலத்தையும் குறித்து நின்றது. “பொதுமொழி வேரூன்றியிருந்த நாட்டை செந்தமிழ் நிலம் என்றும், அதிலிருந்து வேறுபட்டுக் கிளைமொழிகள் செழித்திருந்த தமிழ்நாட்டுப் பகுதிகளைக் கொடுந்தமிழ் நிலம் என்றும் பழங்காலத்துப்புலவர் பாகுபாடு செய்தனர் எனக் கொள்ளலாம்.”

ஆட்சித் தமிழ்
அரசல் அலுவல் மொழியாக அரசு நிர்வாகத்தில் எல்லா மட்டங்களிலும் பயன்படும் மொழி ஆட்சிமொழி அல்லது அலுவலக மொழி எனப்படுகிறது. அவ்வாறு தமிழ் பயன்படும் பொழுது அதை ஆட்சித் தமிழ் எனலாம்.

பயன்பாட்டுத் தேவையை சூழலைப் பொறுத்து மொழியின் தன்மையும் சற்று வேறுபடும். எடுத்துக்காட்டாக இலக்கியத் தமிழ் உணர்ச்சிகளை வெளிப்படத்தக்கதாக அமைக்கிறது. அறிவியல் தமிழ் தகவல்களை துல்லியமாகப் பகிர உதவுகிறது. அதே போல் ஆட்சித் தமிழ் வெவ்வேறு நிர்வாக செயற்பாடுகளை நிறைவேற்றத் தக்கதாக அமைகிறது. இதற்கு ஆட்சித்துறை சார் கலைச்சொற்கள், எழுத்து நடைகள், ஆவண வடிவங்கள் தேவைப்படுகின்றன.

தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழ் அரச அலுவலக மொழியாக இருக்கிறது.

சட்டத் தமிழ்
சட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை சட்டத் தமிழ் எனலாம். மணவை முஸ்தபா போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். ஒரு மக்கள் குழுவுக்கு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அதற்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது.

“நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்.” என்கிறார் மு. முத்துவேலு.

அறிவியல் தமிழ்
அறிவியல் தமிழ் தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் கல்வி, ஆய்வுகள், தகவல் பரிமாற்றம், பிற அறிவியல் புலமைசார் செயற்பாடுகளை முதன்மையாகக் குறிக்கின்றது. இங்கு அறிவியல் தமிழ் மொழியையும், தமிழ் மொழியில் இடம்பெறும் அறிவியல் தொடர்பான செயற்பாடுகளையும் ஒருங்கே சுட்டுகின்றது.

தமிழ் மொழியில், தமிழர் இடையே அறிவியல் செயற்பாடுகள் தொன்று தொட்டு பல காலகட்டங்களில் சிறப்புற்று இருந்தாலும் அறிவியல் தமிழ் இக்காலத்தில் மேற்கே செம்மை பெற்ற அறிவியல் அணுகுமுறைகளை உள்வாங்கி தமிழில், தமிழ்ச்சூழலில் மேற்கொள்ளப்படும் அறிவியல் செயற்பாடுகளை சிறப்பாக குறிக்கின்றது.

மருத்துவத் தமிழ்
மருத்துவத் தமிழ் என்பது மருத்துவத் துறைசார் தகவல்களை துறைசாரிடமும் பொதுமக்களிடமும் பகிர பயன்படும் தமிழ் ஆகும். மருத்துவத்துறை ஆக்கங்கள் நெடுங்காலமாக தமிழில் உண்டு. குறிப்பாக சித்த மருத்தவக் குறிப்புகள் தமிழிலேயே முதன்மையாக இருக்கின்றன. நவீன மருத்துவம் தொடர்பான ஆக்கங்களும் ஓரளவு விரிவாக தமிழில் வெளி வந்துள்ளன.