‘பெண் புலவர்கள்’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

வெண்ணிக் குயத்தியார்

வெண்ணிக் குயத்தியார் சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி. குயவர் குலத்தைச் சேர்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66 பாடலாக அமைகிறது. இதர பாடல்கள் கிடைக்கவில்லை.

இவரின் ஒரு பாடல் புறநானுற்றில்

* பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
* திணை: வாகை. துறை: அரச வாகை.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

பாரிமகளிர்

தற்போது பிரான்மலை என அழைக்கப்படும் பரம்புமலை சூழ்ந்த 300 ஊர்களைக் கொண்ட வளநாட்டின் மன்னனாக இருந்த பாரி மன்னன் மகளிர் இருவர். பாரி மன்னன் கொல்லப்பட்ட பின்பு புலவர் கபிலர் அவர்களை அழைத்துச் சென்ற போது பாரி மகளிர்

“அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில்

எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர் கொளார்

இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில்

வென்று எரிமுரசின் வேந்தர்எம்

குன்றும் கொண்டார்! யாம் எந்தையும் இலமே?”

-என்று இவர்கள் தம் தந்தையை இழந்த துயரத்தைப் பாடிய பாடல் இடம் பெற்றுள்ளது.

தமிழ் பெண் புலவர்கள்

பெண் புலவர் பெயர்
1.அவ்வையார் 2.அஞ்சில் அஞ்சியார் 3.அஞ்சியத்தை மகள் நாகையார்
4.அள்ளூர் நன்முல்லையார் 5.அணிலாடு முன்றிலார் 6.ஆதிமந்தி
7.ஒக்கூர் மாசாத்தியார் 8.ஓரிற் பிச்சையார் 9.கச்சிப்பேட்டு நன்னாகையார்
10.கழார்க்கீரன் எயிற்றியார் 11.காக்கைப்பாடினி நச்செள்ளையார் 12.காவற்பெண்டு
13.காமக்கணி நப்பசலையார் 14.குமுழி ஞாழல் நப்பசையார் 15.குற மகள் இளவெயினியார்
16.குறமகள் குறிஎயினி 17.தாயங்கண்ணியார் 18.நக்கண்ணையார்
19.நல்வெள்ளியார் 20.பாரிமகளிர் 21.பூங்கனுத்திரையார்
22.பெருங்கோப்பெண்டு 23.இளவெயினி 24.பொன்முடியார்
25.பொதும்பில் புல்லளங்கண்ணியார் 26.மாற்பத்தி 27.மாறோகத்து நப்பசலையார்
28.முடத்தாமக் கண்ணியார் 29.முள்ளியூர் பூதியார் 30.வெள்ளி வீதியார்
31.வெண்ணிக் குயத்தியார் 32.மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
Follow

Get every new post delivered to your Inbox.